2021 மே 06, வியாழக்கிழமை

இந்தியாவில் பாரிய பூகம்பம்; 18 பேர் பலி, இராணுவ பதுங்குகுழிகளுக்கும் பாதிப்பு

Super User   / 2011 செப்டெம்பர் 18 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில்  இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.8 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக  அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேபாள மற்றும் சீன எல்லையிலுள்ள சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால்
இந்த இந்தியாவில் 13 பேரும் நேபாளத்தில் 5 பேரும் பலியாகியுள்ளனர். மேலும் 100 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தியாவில் சிக்கிகிம் மாநிலத்தில் 7 பேரும் மேற்கு வங்க மாநிலத்தில் நால்வரும் பீகாரில் இருவரும்   பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பூகம்பத்தினால் சீன எல்லைப் பகுதியிலுள்ள இந்திய இராணுவத்தின் பதுங்கு குழிகளும் பாதிக்கப்பட்டதாகவும் படையினர் பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .