Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபியாவில் சிகிச்சை பெற்றுவந்த யேமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலாஹ் நேற்றைய தினம் பிரத்தியேக விமானத்தில் நாடு திரும்பியிருந்தார். அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் இதனால் ஆத்திரமடைந்து காணப்படுவதால் அரசுக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்குமிடையில் முறுகல் நிலை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
யேமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலாஹ்விற்கு எதிராக கடந்த ஜனவரிமுதல் யேமன் தலைநகர் சனாவில் பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஷெல் தாக்குதலில் படுகாயமடைந்த அலி அப்துல்லா – சவூதி அரேபியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். இருந்தபோதிலும் அலி அப்துல்லாவின் 30 வருட அதிகாரபிடியை விட்டுவிலகி அதிகாரத்தை பகிருமாறு கோரி கிளர்ச்சியாளர்கள் கொதித்தெழுந்துள்ளனர். இந்த கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு ஜனாதிபதி அலி அப்துல்லாவின் மகன் அஹமட் - இராணுவத்தினரை பயன்படுத்தி பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில்தான் ஜனாதிபதி அலி அப்துல்லா நாடு திரும்பியுள்ளார். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆத்திரம் மேலும் அதிகரித்துள்ளது. தலைநகரின் ஷங்கே சுற்றுவட்டத்தில் முகாமிட்டுள்ள கிளர்ச்சியாளர்களை நோக்கி யேமன் படையினர் சரமாரியாக ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டுவருவதால் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுவரை நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் பலர் காயங்களுக்குள்ளாகியும் இருக்கிறார்கள். ஜனாதிபதி அலி அப்துல்லாவின் வருகையை தொடர்ந்து கிளர்ச்சியாளர்களின் கொந்தளிப்பு அதிகரித்துள்ளதால் பாரியதொரு சமூகப்புரட்சி வெடிக்கலாம் என வெளிநாட்டு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஷங்கே சுற்றுவட்டத்திலுள்ள அரச எதிர்ப்பாளர்களின் கொட்டகைகள் மீது யேமன் இராணுவத்தினர் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் பல கொட்டகைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் சிலர் படுகொலை செய்யப்பட்டுமுள்ளமை குறிப்பிடத்தக்கது.
md Sunday, 25 September 2011 11:54 AM
இது அப்துல்லாஹ் சாலிஹின் கடைசி காலம். வம்பை விலைக்கு வாங்கி இருக்கிறார்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
1 hours ago