2021 மே 08, சனிக்கிழமை

இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவிப்பு

Super User   / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக இந்திய தொலைக்காட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை சந்தித்தபோது அமைச்சர் சிதம்பரம் தான் ராஜினாமா செய்ய விரும்புவதை தெரிவித்ததாக சி.என்.என்.- ஐபிஎன் தொலைக்காட்சி தெரிவித்தது.

2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற 2ஜி வானொலி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் போது இந்திய அரசுக்கு பல லட்சம் கோடி ரூபா இழப்பை ஏற்படுத்திய மோசடியை அப்போது நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் தடுக்கத் தவறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

 

இந்நிலையில் அரசாங்கத்திற்கு சங்கடம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக தான் ராஜினாமா செய்ய விரும்புவதாக அமைச்சர் சிதம்பரம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 


  Comments - 0

  • xlntgson Tuesday, 27 September 2011 09:56 PM

    விசாரணைகள் முடியட்டுமே ஏன் அவசரப்படுகிறார், இந்தியாவின் தலைவிதியை மேற்கின் ஊடகங்கள் நிர்ணயிக்கின்றனவா அல்லது பெண்டகனா? சுய பிரகடன உலகப்பாதுகாவலர்கள் பிரணாப் முகர்ஜியை முன் கொண்டு வந்து என்ன செய்து கொள்ள விரும்புகின்றனர், இளவரசு அரியணை ஏற அமெ மேலிடம் அனுமதி வழங்க இன்னும் தயாரில்லை போல் தெரிகிறது! சோனியா இவரை பொறுமையாக இருக்குமாறு கூறி இருப்பதோடு மன்மோகனும் எலி வாடை அடிப்பதை உணர்ந்து சீனா சாங்காய் கூட்டு நாடுகளின் முக்கியம் குறித்து பேசி இருக்கிறார். சார்க்குக்கு என்ன ஆயிற்று? குழப்பிக்கொண்டே இரு?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X