2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

ஜெயலலிதாவின் கோரிக்கை நிராகரிப்பு பெங்களூர் நீதிமன்றில் நாளை ஆஜராக உத்தரவு

Super User   / 2011 ஒக்டோபர் 19 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், அவர் நாளை வியாழக்கிழமை பெங்களூர் நீதிமன்றில் ஆஜராகுவது அவசியம் என  உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

 போதிய பாதுகாப்பு இல்லையெனக் காரணம் காட்டி இவ்வழக்கில் ஆஜராகாமல் இருப்பதற்கு ஜெயலிதா மனுதாக்கல் செய்திருந்தார். எனினும்  அவருக்கு இஸட் பிளஸ் தரத்திலான பாதுகாப்பு வழங்கப்படும் என கர்நாடக மாநில தலைமைச் செயலாளரும் பொலிஸ் பணிப்பாளர் நாயகமும் உறுதியளித்தனர். அதையடுத்து ஜெயலலிதாவின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், நாளை  அவர் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டுக்கும்  1996 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 66 கோடி ரூபா பெறுமதியான சொத்து சேகரித்தமை தொடர்பாக ஜெயலலிதா மீது தமிழகத்தின் முன்னாள் திமுக அரசாங்கத்தினால வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் திமுக அரசாங்கத்தின் கீழ் தமிழகத்தில் தனக்கு நியாயம் வழங்கப்படுமா என்பதுகுறித்து ஜெயலலிதா சந்தேகம் தெரிவித்ததால் அவ்வழக்கு கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X