Shanmugan Murugavel / 2026 ஜனவரி 14 , பி.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்கா தாக்கினால் தாம் ஐ. அமெரிக்கத் தளங்களைத் தாக்குவோமென அயல் நாடுகளை எச்சரித்த நிலையில், மத்திய கிழக்கிலுள்ள தளங்களிலிருந்து சிலரை அமெரிக்கா வாபஸ் பெற்றுள்ளதாக அமெரிக்க அதிகாரியொருவர் இன்று தெரிவித்துள்ளார்.
உச்சமடைந்துள்ள பிராந்தியப் பதற்றங்களுக்கு மத்தியில் முன்னேற்பாடாக பிராந்தியத்திலுள்ள முக்கிய தளங்களிலிருந்து சிலரை அமெரிக்கா வாபஸ் பெற்றுள்ளதாக தன்னை அடையாளங்காட்ட விரும்பாத அமெரிக் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
அமெரிக்க இராணுவத் தலையீடு சாத்தியம் போலத் தோன்றுவதாக ஐரோப்பிய அதிகாரிகள் இருவர் தெரிவித்ததோடு, அதிலொருவர் இது அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் வருமென்று குறிப்பிட்டுள்ளார். இது தவிர தலையீட்டை மேற்கொள்ள ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவெடித்துள்ளார் போலத் தோன்றுவதாக இஸ்ரேலிய அதிகாரியொருவரும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போதைய பிராந்தியப் பதற்றங்களுக்கு பதிலீடாகவே பிராந்தியத்திலுள்ள மிகப் பெரிய அமெரிக்கத் தளமான அல் உடெய்ட் விமானத் தளத்திலிருந்து ஆட்குறைப்பு செய்யப்பட்டதாக கட்டார் கூறியுள்ளது.
இதேவேளை தளத்தை விட்டு வெளியேறுமாறு சிலருக்கு கூறப்பட்டதாக மூன்று இராஜதந்திரிகள் தெரிவித்தபோதும், கடந்தாண்டு ஈரானின் ஏவுகணைத் தாக்குதலொன்று இடம்பெறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பெரும் எண்ணிக்கையான படைகள் கால்பந்தாட்ட அரங்கமொன்றுக்கும், வணிக வளாகமொன்றுக்கும் பஸ்களில் கொண்டு செல்லப்பட்டது போல இடம்பெறவில்லை.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago