2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

கேணல் கடாபி உயிரிழந்தார்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபி காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் இடைக்கால நிர்வாக கவுன்ஸில் பேச்சாளர் ஆப்தில் மஜித் ராய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

'அவரின் தலையில் காயம் ஏற்பட்டது. அவரின் குழுவினருக்கு எதிராக கடும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அவர் பலியாகிவிட்டார் என ஆப்தில் மஜித் கூறியுள்ளார்.

எனினும்  இத்தகவலை சுயாதீன வட்டாரங்கள் மூலம் உறுதிப்படுத்த முடியவில்லை என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

கடாபியின் விதியை அந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்: ரஷ்ய ஜனாதிபதி

லிபியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் விதியை லிபிய மக்களே தீர்மானிக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ் சற்று முன்னர் கூறினார்.

ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட கேணல் கடாபி அவரின் சொந்த ஊரான சேர்ட்டேவில் காயமடைந்த நிலையில் லிபிய தேசிய இடைக்கால கவுன்ஸில் படைகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே ரஷ்ய ஜனாதிபதி மெத்வதேவ் இவ்வாறு கூறினார்.

ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டேவுடனான சந்திப்பின் பின்னர் ரஷ்ய ஜனாதிபதி மெத்வதேவ் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை கேணல் கடாபி கைது செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால் அது சிறந்த செய்தியாகும் என நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே கூறியுள்ளார்.


  Comments - 0

 • Razik Thursday, 20 October 2011 11:50 PM

  வெரி good

  Reply : 0       0

  nawas Friday, 21 October 2011 12:46 AM

  அல்லாஹ் அக்பர் அநியாயக்காரர்களுக்கு இப்படி இழிவான தண்டனை உலகில். மறுமையில் இதைவிட அதிகம் உண்டு !!!!!

  Reply : 0       0

  jampavan Friday, 21 October 2011 12:50 AM

  மிகவும் சந்தோஷமான செய்தி. உலக அடிமைப்படுத்த பட்ட மக்களுக்கு .... இப்படியே உலக சர்வாதிகாரிகள் அழிக்கப்பட வேண்டும்

  Reply : 0       0

  ala Friday, 21 October 2011 01:48 AM

  அனைத்து முஸ்லிம் நாடுகளிலும் உள்ள தலைவர்களை கொன்று அமெரிக்க கைக்கூலிகளின் ஆட்சி நடைபெறும் திட்டங்கள். மனிதர்களை கொல்லும் இந்த செயலை யாருமே கேட்பார்கள் இல்லை.

  Reply : 0       0

  meenavan Friday, 21 October 2011 02:33 AM

  கைது செய்யப்பட்ட கடாபி கொல்லப்பட்டுள்ளார்? பின் லாதினுக்கு நடந்தது போல ஜனாஸா கடலில் வீசப்படுமா?

  Reply : 0       0

  M. Anushard Mohamed Friday, 21 October 2011 04:41 AM

  ராசிக், நவாஸ், ஜாம்பவான் ஆகிய சகோதரர்களே இதை நல்ல செய்தியாக பார்க்க உங்களுக்கு மனம் எப்படி வந்தது? ... உங்களுடைய ஒரு சகோதரன் மரணித்திருக்கிறான் ... மனம் வருந்தவிடினும் மகிழ்ச்சி கொள்ளதிருங்கள்.

  Reply : 0       0

  jampavan Friday, 21 October 2011 06:35 AM

  அனுசாத் முகமது .... அவர்களே யார் சொல்லியும் கடாபியை குறை கூறவில்லை .... அவர் ஆண்டார் நாட்டை .. அது சரி.... அவர் மக்கள் ... ? இவர்களுக்கு என்ன வேலை.... கனிபால் கடாபி என்ற மகன் இருந்தான் தெரியுமா ?... இவன் செய்த கொடுமை ... இவன் சொல்லி அப்பா செய்த கொடுமையை நேரில் அறிந்தவன் நான்........ நான் எழுதுவதில் பிழை இல்லை என நினைக்கிறேன்.

  Reply : 0       0

  hameed Friday, 21 October 2011 09:07 AM

  சரண் அடையாமல் போராடி இறந்துல்லார் இம் மாவீரன். ...

  Reply : 0       0

  manithan Friday, 21 October 2011 11:58 AM

  காந்தியை சுட்ட கோட்சேயிடமும் காரணம் கேட்டால் சொல்வான். மனிதன் என்பது மரணத்தில் சந்தோசப்படதிருப்பது என நினைக்கிறேன் சகோதரரே. பிழை என்றால் மன்னியுங்கள் ஜாம்பவான். .

  Reply : 0       0

  manithan Friday, 21 October 2011 07:32 PM

  கடாபியிடம் ஏழு ஆண்டுகள் சொந்த விமானியாகப் பணியாற்றிய இந்தோனேசிய விமானி ஆத்மஜா இன்று இந்தோனேசியாவின் மெட்ரோ டிவிக்கு அளித்த பேட்டியில் கடாபி ஒரு சிறந்த மனிதர் என்றும், ஒரு போதும் வீணாகச் சினமுறவில்லை என்றும், நீதியாகவே நடந்தார் என்றும் கூறினார். கடாபியின் கொலையில் மகிழ்ச்சியடைவோர் இதனையும் தெரிந்து கொள்வது நன்று.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X