Janu / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
குறித்த கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதிலும், பிரதான சந்தேக நபர் தலைமறைவாகி தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஊடாக வியாழக்கிழமை (02) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார். இதனைத் தொடர்ந்து, அடையாள அணிவகுப்பை நடத்த உத்தரவிட்ட நீதிவான், சந்தேக நபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கடந்த சனிக்கிழமை கொடிகாமம் - கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு சென்ற கொடிகாமம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு உத்தியோகத்தர்களில் ஒருவர் உழவு இயந்திரத்தால் மோதப்பட்டு உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago