2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

நுவான் துஷாரவின் மனு ஏப்ரல் 9 பரிசீலனை

Janu   / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரீமியர் லீக் (IPL) உள்ளிட்ட சர்வதேச பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்குத் தேவையான 'தடையின்மை சான்றிதழை' (NOC) வழங்குமாறு, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி, கிரிக்கெட் வீரர் நுவான் துஷார தாக்கல் செய்த மனுவை ஏப்ரல் 9 ஆம் திகதி பரிசீலிக்க கொழும்பு நீதிமன்றம் வியாழக்கிழமை (02) தீர்மானித்தது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நிர்ணயித்துள்ள உடற்தகுதி பரீட்சையில் (Fitness Test) தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தை காட்டி, தெரிவுக்குழுவினரின் பரிந்துரையின் அடிப்படையில் தடையின்மை சான்றிதழை வழங்க மறுப்பது சட்டவிரோதமானது என தெரிவித்து, சட்டத்தரணி ஜி.ஜி. அருள் பிரகாசம் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம், அதன் தலைவர் ஷம்மி சில்வா, செயலாளர் பந்துல திஸாநாயக்க, பொருளாளர் சுஜீவ கொடலியத்த மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .