Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 22 , பி.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கடலடி ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு ரஷ்ய அதிகாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தின்படி பேரிங் நீரிணைக்கு அடியில் 105 கிலோமீற்றர் நீளம் கொண்ட சுரங்கப்பாதை அமைக்கப்படும். இது பிரான்ஸுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான ஆங்கில கால்வாயின் கீழான சுரங்கப்பாதையைவிட இருமடங்கு நீளமானதாகும்.
இச்சுரங்க ரயில் பாதையை அமைப்பதற்கு 10-12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் 10-15 வருடகாலம் தேவைப்படும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் ரஷ்யாவின் பிரதான ரயில் வலையமைப்புடன் இச்சுரங்கப்பாதையை இணைப்பதற்கு சுமார் 4000 கிலோமீற்றர் (2485 மைல்கள்) நீளமான ரயில் பாதையை நிர்மாணிக்க வேண்டியிருக்கும். அதேவேளை அமெரிக்காவின் ரயில் வலையமைப்புடன் இதை இணைப்பதற்கு 2000 கிலோமீற்றர் (1243 மைல்கள்) நீளமான ரயில் பாதை அமைக்கப்பட வேண்டியிருக்கும்.
Ramesh Sunday, 23 October 2011 08:13 PM
அப்ப லண்டனிலிருந்து அமெரிக்காவுக்கு ரயிலில் போகலாம்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
43 minute ago
2 hours ago