2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

உத்திரபிரதேசம் நான்கு புதிய மாநிலங்களாக பிரிக்கப்படும் : முதல்வர் மாயாவதி அதிரடி

Super User   / 2011 நவம்பர் 15 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தை நான்கு புதிய மாநிலங்களாக பிரிப்பதற்கு மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அம்மாநிலத்தின் முதலமைச்சரும்  பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியுமான மாயாவதி இன்று அறிவித்துள்ளார்.

246,283 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும் சுமார் 20 கோடி சனத் தொகையையும்கொண்டதாக உத்திரபிரதேச மாநிலம் விளங்குகிறது.

இந்நிலையில் பூர்வாஞ்சல் (கிழக்கு உ.பி.), பஸ்சிஹிமாஞ்சல் (மேற்கு உ.பி.), புந்தெல்கண்ட், ஆவாத் (மத்திய உ.பி.) ஆகிய நான்கு புதிய மாநிலங்களாக உத்திரபிரதேசம் பிரிக்கப்படும் என மாயாவதி தெரிவித்துள்ளார்.

சிறிய மாநிலங்கள் சிறப்பாக நிர்வகிக்கப்படுவதற்கும் அபிவிருத்தி செய்யப்படுவதற்கும் வசதியானவை என மாயாவதி கூறுகிறார்.

இதற்கான மாநில அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.  சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.  

உத்திரபிரதேச மாநில சட்டசபை 403 அங்கத்தவர்களை கொண்டுள்ளது. இந்திய நாடாளுமன்ற லோக்சபாவுக்கு இம்மாநிலத்திலிருந்தே அதிக (80) உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியலமைப்பின்படி மாநிலங்களுக்குப் பெயரிடுதல், மாநிலங்களை மீள் ஒழுங்குபடுத்தல், புதிய மாநிலங்களை உருவாக்குதல் என்பன மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உரியவை என முதலமைச்சர் மாயாவதி கூறினார்.

எனினும் இவ்விடயத்தில் சாதகமான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மத்திய அரசாங்கம் இதுவிடயத்தில் துரித  நடவடிக்கை மேற்கொள்ளும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இது குறித்து எழுத்துமூல கோரிக்கையையும் மாயாவதி விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் உத்திரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்களின் உணர்வுகளை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் நோக்குடன் இவ்வறிவிப்பு வெளியாகியிருக்கலாம் என கருதப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு, கிழக்கு, புந்தெல்கண்ட் பிராந்தியங்கள் சிறிய மாநிலங்களுக்கு ஆதரவான நிலைப்பாடு உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • Nishanthan Tuesday, 15 November 2011 11:01 PM

  ஆந்திர பிரதேசத்தில் மாநிலத்தை பிரிப்பதற்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை உத்திரபிரதேசத்தில் அரசாங்கமே பிரிக்கச் சொல்கிறது.

  Reply : 0       0

  ilakijan Tuesday, 15 November 2011 11:24 PM

  சரியான சிந்தனை. சிறிய சிங்கப்பூர், சுவிஸ் வாழ்க்கைத் தரத்தில் பெஸ்ட்.

  Reply : 0       0

  riswan Tuesday, 15 November 2011 11:54 PM

  சுவிசில் பெண்கள் அனேகமாக நிர்வாணமாக இருப்பார்கள். இதுதான் மேத்கத்தய கலாச்சாரம். ilakijan நீங்க இததான் விரும்புருங்களா?

  Reply : 0       0

  Nishanthan Tuesday, 15 November 2011 11:57 PM

  @ilakijan அது நிர்வகிக்கப்படுவதைப் பொறுத்திருக்கு. அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் ஈரானிலும் வாழ்க்கைத்தரம் நன்றாகத்தான் உள்ளது. புரூண்டி, பெனின், பூட்டான் ஆகியன சிறிய நாடுகளும் வறுமையில் வாடுகின்றன.

  Reply : 0       0

  jambavan Wednesday, 16 November 2011 05:36 AM

  இலக்சன் ........ சுவிஸில் பெண்கள் நிர்வாணமாகவா திரிகிறார்கள் ..?
  அந்த நாட்டை பற்றி நன்றாக தெரியுமா ?...அந்த நாட்டில் நான்கு மொழி பேசுபவர்கள் சகல அந்தஸ்தோடும் வாழ்கிறார்கள் .. இதில் நூற்றி நாட்பத்தெட்டு மொழி பேசும் வெளி நாட்டவரும் அதே உரிமையுடன் வாழ்கிறார்கள் ..ஒரு உண்மையான ஜனநாயக நாடு.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X