Super User / 2011 நவம்பர் 16 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரியாவில் அரச படை முகாம்கள் மீது படைகளிலிருந்து விலகிச்சென்ற குழுவினர் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இக்கிளர்ச்சிக் குழுவினர் சுதந்திர இராணுவத்தினர் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தலைநகர் டமஸ்கஸ்ஸிலுள்ள விமானப்படையின் புலனாய்வுப் பிரிவுத் தளத்தில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
'சுதந்திர இராணுவத்தினர் ஆர்.பி.ஜி. மூலம் விமானப்படை புலனாய்வுப் பிரிவு தலைமையத்தின் மீது தாக்குதல் நடத்தினர்' என கிளர்ச்சியாளர்கள் அறிக்கையொன்றல் தெரிவித்தனர்.
சிரியாவில் ஜனாதிபதி; பஷீர் அல் ஆஸத்தின் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த 8 மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் சிரிய சுதந்திர இராணுவத்தின் முதலாவது பாரிய தாக்குதலாக இன்றைய தாக்குதல் விளங்குகிறது.
'தூதரகங்கள் தாக்கப்பட மாட்டாது'
இதேவேளை சிரியாவிலுள்ள வெளிநாட்டுத் தூதுரகங்கள் மீது அரச படைகளினால் இனி தாக்குதல் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என சிரிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
சிரிய ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லா கூறியதையடுத்து சிரியாவிலுள்ள ஜோர்தான் தூதரகம் அரச ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டதுடன் ஜோர்தான் கொடியும் கிழித்தெறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
21 minute ago
55 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
55 minute ago
4 hours ago
4 hours ago