Super User / 2011 நவம்பர் 28 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
2 ஜி வானொலி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகளுமான மு. கனிமொழிக்கு பிணை வழங்க டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் அவர் இன்னும் திங்கள் இரவையும் திஹார் சிறையிலேயே கழிக்கிறார்.
தமக்கு பிணை வழங்குமாறு கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத் குமார் உட்பட ஐவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட டில்லி உயர் நீதிமன்றம், இவர்கள் ஐவருக்கும் பிணை வழங்குமாறு 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கை விசாரித்து வரும் விசேட நீதிமன்றுக்கு நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.
எனினும் நேற்றைய அலுவலக நேரத்திற்குள் விசேட சி.பி.ஐ. நீதிபதி ஓ.பி. ஷைனிக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரதிகள் அனுப்பப்படவில்லை.
குற்றம்சுமத்தப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் வேண்டுகோளுக்கிணங்க நீதிபதி ஷைனி, மாலை 5.15 மணிவரை வரை காத்திருந்தபோதிலும் பிணைமனு விண்ணப்பத்துடன் இணைத்து நீதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டிய உயர் நீதிமன்றத்தின் மேற்படி உத்தரவுப் பத்திரம் கிடைக்கவில்லை.
இதனால் கனிமொழியும் ஏனைய நால்வரும் சிறையிலிருந்து விடுதலையாகவில்லை. கனிமொழி கடந்த மே மாதத்திலிருந்து திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இன்று செவ்வாய்க்கிழமை காலை விசேட சி.பி.ஐ. நீதிபதியிடம் பிணை மனுக்கள் கையளிக்கப்படும் என கனிமொழியின் சட்டத்தரணி ஆர்.சண்முகசுந்தரம் கூறினார்..
2 hours ago
2 hours ago
RISWAN Tuesday, 29 November 2011 08:28 PM
ஏன் இத பொறுத்துக்கொள்ள மாட்டார்களோ !!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago