2021 ஜனவரி 27, புதன்கிழமை

மோதல்களை உடன் நிறுத்தவும்: பான் கீ மூன்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 19 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஸாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் இடம்பெறும் மோதல்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து அங்கு யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் ஆறாவது நாளாக நீடித்து வருகின்ற நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். 

இந்த வன்முறைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுடன் இரு தரப்புகளுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பில் எகிப்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தான் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

  Comments - 0

 • saabir Wednesday, 21 November 2012 04:57 AM

  திரு மூன் அவர்களே... காஸாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் இஸ்ரேலுக்கும் போர் நடைபெறவில்லை. மாறாக காஸா மீது இஸ்ரேல் தீவிரவாதிகள் கொலைவறி ஆட்டம் ஆடுகிறார்கள். இது சின்னப் புள்ளைக்குக் கூட தெரியும். அப்புறம் ஏன் இப்படி ஒரு கருத்து...

  Reply : 0       0

  shahim Monday, 19 November 2012 10:10 AM

  If you want to see terrorism, this is terrorism.
  Bombing a family home full of children in order to kill a single person

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .