2021 ஜனவரி 20, புதன்கிழமை

அமெரிக்க தூதரக பாதுகாப்பு காவலர் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 20 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் தலைநகரான ரெல் அவிவ்வில் உள்ள அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு காவலர் ஒருவருக்கு காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கத்தியும் கோடாரியும் வைத்திருந்த 40 வயது மதிக்கத்தக்க இந்த இஸ்ரேலியர், இந்த பாதுகாப்பு காவலரை தாக்கியதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தூதரகத்திலிருந்து பாதுகாவலர்கள் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அரசியல் காரணங்களை முன்னிட்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கமாட்டாது என இஸ்ரேலிய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .