2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

ஹிலாரி கிளின்டன் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

65 வயதான ஹிலாரி கிளின்டன் இரத்த உறைவு நோய் காரணமாகவே நியூயோர்க்கிலுள்ள பிரிஸ்பைடீரியன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது வயிற்றில் வைரஸ் தொற்று காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியப் பரிசோதனையின் மூலம் ஹிலாரி கிளின்டனுக்கு இரத்த உறைவு நோய் உள்ளதை வைத்தியர்கள் கண்டுபிடித்துள்ளதாக அவரது பேச்சாளர் பிலிப் றெனிஸ் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முதலாவது பதவிக்காலத்தின்போது, ஹிலாரி கிளின்டன் அந்நாட்டு இராஜாங்கச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது தடவையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் அவர் உத்தியோகபூர்வமாக பதவியேற்பதற்கு முன்னர் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்  ஹிலாரி கிளின்டன் பதவி விலகவுள்ளார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .