2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

சிம்பாவேயில் தேர்தல்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 31 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடும் போட்டி நிலவும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் சிம்பாவே மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தல் ஏற்கெனவே மோசடிக் குற்றச்சாட்டுக்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தானும் தனது கட்சியான ஸானு கட்சியும் தோல்வியடைந்தால் தான் பதவி விலகிக் கொள்வாரென 89 வயதான ஜனாதிபதி றோபேட் முகாபே தெரிவித்துள்ளார்.

இவர் 33 வருடங்களாக சிம்பாவே ஜனாதிபதியாக இருந்து வருகின்றார்.

வாக்காளர் பட்டியலில் ஸானு கட்சி மாற்றங்களை புகுத்தியுள்ளதாக ஜனநாயக வழியில் மாற்றம் என்னும் குற்றஞ்சாட்டியுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

சிம்பாவேயில் தேர்தல் பிரசாரம் அநேகமாக அமைதியாக காணப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X