2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

மோடி பங்கேற்கவிருந்த கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்புகள்: நால்வர் பலி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இன்று ஞாயிற்றுக்கிழமை பீஹார் மாநிலத்தில் பாட்னாவில் பங்கேற்கவிருந்த பொதுக்கூட்ட மைதானத்தில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதனால் நால்வர் மரணமடைந்துள்ளதுடன்,  பலர் காயமடைந்துள்ளனர் என்று இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், கூட்டம் இடம்பெறவிருந்த மைதானத்தில் சக்தி குறைந்த குண்டு வெடித்ததில் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

பாட்னாவில் இன்று நடந்த ஐந்து நாட்டு வெடிகுண்டு வெடிப்புகள் இதைத்தான் காட்டுகிறது. இருந்தாலும் நரேந்திரமோடி திட்டமிட்டபடி இன்றைய கூட்டத்தில் பேசுவார் என்று பாரதிய ஜனதாக் கட்சி அறிவித்துள்ளது.

மோடி பங்கேற்கவிருக்கும் நிலையில் கூட்டத்தை சீர்குலைத்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் முயற்சி இது என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

இது குறித்து பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான ராஜீவ் பிரதார் ரூடி கூறுகையில்,

இந்த குண்டுவெடிப்புகள் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை நிரூபிக்கிறது. இருப்பினும் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். திட்டமிட்டபடி மோடி இன்று பேசுவார் என்றார்.

கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், குண்டுவெடிப்பை நாங்கள் கண்டிக்கிறோம். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--