2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ஆப்கானில் பிரதியமைச்சர் கடத்தப்பட்டார்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் பொது வேலைகளுக்கான பிரதி அமைச்சர் அஹ்மட் ஷா வாஹிட்  என்பவர் காபூலில் செவ்வாய்க்கிழமை (15) கடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர் தனது வேலைக்காக சென்றுகொண்டிருந்தபோது, வாகனமொன்றில் வந்த 04 ஆயுததாரிகள் அமைச்சரின் காரின் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு அவரை கடத்திச் சென்றதாகவும் அந்த நாட்டு உட்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இத்தாக்குதலில் அமைச்சரின் சாரதி காயமடைந்துள்ளார். தலிபான் கிளர்ச்சியுடன் தொடர்பானதாகவன்றி இந்தச் சம்பவத்தை வேறு குற்றச்செயலாகக் கருதி ஆராய்வதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைச்சர்களுக்கு வழமையாக ஆயுதப் பாதுகாப்பு வழங்கப்படும். இருப்பினும், கடத்தப்பட்ட அமைச்சர் தனது மெய்பாதுகாவலர்களுடன் ஏன் செல்லவில்லை  என்பது தொடர்பில் தெளிவாகத் தெரியவரவில்லை எனவும் அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--