2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

நைஜீரியாவில் மாணவிகள் கடத்தப்பட்டனர்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட – கிழக்கு நைஜீரியாவிலுள்ள பாடசாலையொன்றைச் சேர்ந்த சுமார் 100 மாணவிகள் கடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

போனோ மாநிலத்தின் சிபொக் பகுதியிலுள்ள  பாடசாலையொன்றுக்கு செவ்வாய்க்கிழமை (15) இரவு வந்த ஆயுததாரிகள், விடுதியிலுள்ள மாணவிகளை லொறிகளில் ஏறுமாறு உத்தரவிட்டனர்.

பாடசாலைகளை இலக்குவைத்து அடிக்கடி தாக்குதல்களை மேற்கொள்கின்ற போகோ ஹரம் என்ற இஸ்லாமிய குழுவினரே இதனை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்குழு வட நைஜீரியாவில் ஒரு இஸ்லாமிய நாடமைப்பதற்கான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறிருக்க, தலைநகர் அபுஜாவில் திங்கட்கிழமை (14)  இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 70 பேர் கொல்லப்பட்டமைக்கும் இக்குழுவினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X