2021 மே 06, வியாழக்கிழமை

எகிப்தில் தாக்குதல்கள்; 26 பேர் மரணம்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 30 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்தின் சினாய் குடாநாட்டில் இஸ்லாமிய போராளிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்களில் குறைந்தபட்சம் 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வட சினாய் தலைநகரான எல் அரிஷ்சாவில் இராணுவ இலக்குகளை வைத்து கார் குண்டுத் தாக்குதல் மற்றும் மோட்டார் தாக்குதல் நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன. இதன்போது படையினர் சிலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸாவின் எல்லையான ரஃபா நகர் மற்றும் ஷேக் ஷுவெய்ட் நகருக்கு அருகிலும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .