2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

கலாமுக்காக வெள்ளை மாளிகையில் அரைக் கம்பத்தில் கொடி: வதந்தி

Princiya Dixci   / 2015 ஜூலை 31 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல் கலாமின் மறைவையடுத்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் தேசியக் கொடி, அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளதாகவும் அதன் வரலாற்றில், உலகத் தலைவர் ஒருவருக்காக அவ்வாறு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டமை இதுவே முதற்தடவை என் சமூக ஊடக இணையத் தளங்களில் தகவல்கள் மற்றும் செய்தி பரிமாறப்பட்டிருந்தன.

இவ்வாறு வெளியிடப்படும் தகவலிலுள்ள இரண்டு விடயங்களும் பிழையானவையாகும்.

டென்னிஸி மாநிலத்திலுள்ள சற்றநூகாவில், ஐந்து அமெரிக்கத் துருப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்காக வெள்ளை மாளிகை மற்றும் மத்திய அரசியல் எல்லாக் கட்டடங்களிலும் இருந்த கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தன. ஜூலை 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இவ்வாறு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தன.

அத்தோடு, இதற்கு முன்னர், தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் ஜனாதிபதி வின்ஸ்டன் சேர்ச்சில், எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி அன்வர் சதத், இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் யிற்ஸக் றபின் போன்ற அரச தலைவர்கள், முன்னாள் பாப்பாண்டவரான இரண்டாம் ஜோன் போல்  ஆகியோருக்காகவும் இதற்கு முன்னர் வெள்ளை மாளிகையில் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .