Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஜனவரி 24 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈராக்கின் கர்பாலா நகரில் இடம்பெற்ற இரு கார் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 25 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 70 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஷியா யாத்திரிகர்களை இலக்குவைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாவது குண்டுத்தாக்குதல் கர்பாலாவுக்கு யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற பஸ்கள் மீது நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டதுடன் 18 பேர் காயமடைந்தனர்.
சில மணித்தியாலங்களின் பின்னர் கர்பாலா புற நகரில் இரண்டாவது குண்டுவெடிப்பு இடம்பெற்றது. இதில் 18 பேர் பலியானதுடன் 50 பேர் காயமடைந்தனர்.
இன்று தலைநகர் பாக்தாத்திலும் இரு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன. முதலாவது குண்டுத்தாக்குதலில் புலனாய்வு அதிகாரியொருவரும் அவரின் சாரதியும் கொல்லப்பட்டனர். இரண்டாவது குண்டுவெடிப்பில் 8 பேர் காயமடைந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
31 minute ago