2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 27 பேர் பலி

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, கிறிஸ்மஸ் தீவுக்கு சட்டவிரோத குடியேற்ற வாசிகளை ஏற்றிச் சென்ற படகு பாறையொன்றுடன் மோதியதில் அப்படகில் பயணித்த 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. 41 பேர் நடுக்கடலில் ஆபத்தான கடல் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும்  ஒருவர் நீந்திக் கரை சேர்ந்திருப்பதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படகில் ஈராக், ஈரான், ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே பெரும்பாலாகக் காணப்படுவதுடன், சிறுவர்களும் பெண்களும் இருப்பதாக நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் படகில் பயணித்தவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லையென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--