2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

நேட்டோ படைகளுக்கான 27 எரிபொருள் தாங்கிகள் பாகிஸ்தானில் அழிப்பு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோப் படையினருக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற சுமார் 27 எண்ணெய்த் தாங்கிகளை பாகிஸ்தானின் தென்பகுதியில் இன்று காலை தீவிரவாதிகள் அழித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த வருடங்களில் இவ்வாறாக சுமார் 100 தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தபோதிலும், சிந்து மாகாணத்தில் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் இதுவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற  வான் தாக்குதலின் பின்னர், ஆப்கானிஸ்தானுக்கான விநியோகப் பாதையை பாகிஸ்தான் தடை செய்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--