2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை

Super User   / 2010 டிசெம்பர் 21 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவில் தனது மாணவர்கள் இருவருடன் பாலியல் உறவுகொண்ட குற்றச்சாட்டுக்குள்ளான பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு 28 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு அவுஸ்திரேலியாவின் நிவ்மன் நகரைச் சேர்ந்த 25 வயதான இந்த ஆசிரியை 15 மற்றும் 16 வயதான தனது மாணவர்கள் இருவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த ஆசிரியையின் பெயர் வெளியிடப்படவில்லை.

2009 டிசெம்பர் மாதத்திற்கும் இவ்வருட ஜனவரி மாதத்திற்கும் இடையில் இம்மாணவர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது வீட்டிற்கு அழைத்து அவர்களுடன் மது அருந்தி பின்னர் பாலியல் உறவிலும் ஈடுபட்டதாக பேர்த் நகரிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இம்மாணவர்களுக்கு ஆபாச படங்கள் உட்பட மோசமான குறுஞ்செய்திகளையும் அனுப்பியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
தன்மீதான குற்றச்சாட்டுகளை அப்பெண் ஒப்புக்கொண்டார்.

கற்பித்தல் திறமைக்காக விருது பெற்ற இந்த ஆசிரியை நிவ்மன் நகருக்கு இடமாறியதால் அதிருப்தியடைந்து பின்னர் மது அருந்த ஆரம்பித்தாகவும் இதுவே மேற்படி குற்றச்செயல்களுக்கு வழிவகுத்தாகவும் அவரின் சட்டத்தரணி வாதாடினர்.

எனினும், நீதிபதி எட்டோன் 28 மாத சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.

இப்பெண்ணின் மேற்படி செயற்பாடுகளை சுய அழிவு நடவடிக்கை என விமர்சித்த நீதிபதி, அப்பெண் மீண்டும் அவுஸ்திரேலிய பாடசாலைகள் எதிலும் ஆசிரியையாக பணியாற்றும் வாய்ப்பை பெறாமல் போகலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0

 • Fahim Thursday, 23 December 2010 06:53 PM

  இலங்கையில் எத்தனையோ பாடசாலைகளில் இதைவிடப் பெரிய குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மாணவர்களுடன் மாணவிகள் இப்படி ஈடுபட்டுக் குழந்தை பெற்ற சம்பவங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.

  Reply : 0       0

  riyaz Friday, 24 December 2010 12:23 AM

  ஆண் பெண் கலவன் பாடசாலைகள் மிகுந்த கண் காணிப்பின் கீழே நடத்தப்பட வேண்டும். மிகவும் பொருத்தம் கலப்பு இல்லாமல் பாடசாலை நடாத்துவதே. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்ததால் பத்திக்கொள்ளவே செய்யும்

  Reply : 0       0

  xlntgson Saturday, 25 December 2010 10:13 PM

  ஆடவர்/மகளிர் மட்டுமே என்றால் ஒருபாற் சேர்க்கை குற்றச்சாட்டு!

  Reply : 0       0

  tamilsalafi.edicypages.com Wednesday, 22 December 2010 08:04 PM

  இந்த கலவன் பாடசாலைகளால் இந்த மாதிரியான விடயங்கள் நடப்பது புதுமை அல்ல. ஆணும் பெண்ணும் பழக ஆரம்பித்தால் வயது, சூழல் , ஆசிரியர் மாணவர் உறவு எல்லாம் மங்கி மறைந்து இப்படியான நடத்தைகள் நடப்பது புதுமை அல்ல. இந்த மாதிரி எத்தனை விடயங்கள் தான் நடந்து விட்டன. பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சிந்திக்கிறார்களா ? இன்னும் காமமும் களியாட்டங்களும் தலை விரித்து ஆடும் ஆஸ்திரேலியா போன்ற நாட்டில் இதற்கு தண்டனை வழங்கியது ஆச்சரியம் தான்.

  Reply : 0       0

  Thilak Wednesday, 22 December 2010 08:21 PM

  இலங்கையில் ஆயிரக்கணக்கான கலவன் பாடசாலைகளில் மாணவர்கள் ஒழுக்கமாக கல்விகற்கின்றனர். இதுநடந்தது அவுஸ்திரேலியாவில் அதுவும் இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டது மாணவர்களும் மாணவிகளும் அல்ல. மாணவர்களுடம் ஆசிரியையும். அங்குகூட இது விதிவிலக்கான சம்பவமே. இதைவைத்துக்கொண்டு கலவன் பாடசாலைகளை குறைகூற வேண்டாம்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .