2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

பாக். நாடாளுமன்ற உறுப்பினர்களில் 29 போலி பட்டதாரிகள்

Super User   / 2010 ஜூலை 14 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 29 பேர் போலிப் பட்டப்படிப்புச் சான்றிதழ்களை சமர்பித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலமே இவ்விபரம் வெளியாகியுள்ளது.

2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலின்போது தெரிவான பெரும் எண்ணிக்கையானோர் போலி பட்டப்படிப்புச் சான்றிதழ்களை சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி எமக்கு 936 பட்டப்படிப்புச் சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றில் 511 சான்றிதழ்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 29 சான்றிதழ்கள் போலியானவை எனத் தெரியவந்துள்து என பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவுக்கான ஆலோசகர் மெஹ்மூத் ரஸா செவ்வாயன்று கூறியுள்ளார்.

ஆனால், குறித்த எம்.பிகளின் பெயர் விபரங்களை வெளியிடுவதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்த ஆணைக்குழு ஜுலை 16 ஆம் திகதி தமது முழுமையான விசாரணை அறிக்கையை வெளியிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--