2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

3 சிறார்களை 8 மாதங்களாக துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய வான் சாரதி கைது

Kogilavani   / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

altபுது டில்லியில் 12 வயதான ஒரு சிறுமியும் அவளின் சகோதரர்கள் இருவரும் கடந்த 8 மாதங்களாக பாடசாலை வான் சாரதியாலும் அவனது நான்கு நண்பர்களாலும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்தமை தற்போது அம்பலமாகியுள்ளது.

அச்சகோதரர்கள் 7, 13 வயதானவர்களாவர். இவ்வல்லுறவுகள்  குறித்து மௌனம் காக்கும்படியும் இதுகுறித்து பகிரங்கப்படுத்தப்படுமாயின் கடும்  பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் எனவும் அச்சிறார்கள் எச்சரிக்கப்பட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இத்துஷ்பிரயோகம்  குறித்து இச்சிறார்களின் விதவைத் தாய் அறிந்தபோது, பொலிஸில் முறைப்பாடு செய்யக்கூடாது என அவருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாம்.

எனினும் மருத்துவப் பரிசோதனையொன்றின் மூலம், அச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள் என உறுதிசெய்ப்பட்டுள்ளது. அதன்பின் மேற்படி வாகன சாரதியை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். குறித்த  சிறுமி 07 ஆம் வகுப்பில் கல்விக் கற்றுக்கொண்டிருக்கிறார் என்றும் பொலிஸ் அதிகாரி ஜஸ்பல் சிங் தெரிவித்துள்ளார்.

38 வயதான லலித் ரட்டாவல் எனும் மேற்படி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸார்,அந்தச் சிறுமியின் சகோதர்களது மருத்துவ அறிக்கையை வைத்தியசாலையிடமிருந்து எதிர்பார்த்திருக்கின்றனர்.

கடந்த ஒருசில நாட்களாக அந்நத் சிறுவர்கள் தனது தாயுடன் உரையாடுவதை நிறுத்தியுள்ளதுடன் கிரமமாக வகுப்புகளுக்கு செல்வதையும் தவிர்த்து வந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.  இறுதியில் சமூக சேவகரான அயலவர் ஒருவரிடம் இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .