2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

தேர்தல் பிரசார செலவுக்காக 356 கோடியை செலவிட்டது அமெரிக்கா

Kogilavani   / 2012 நவம்பர் 08 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெற்று முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பிரசார செலவுகளுக்காக சுமார் 356 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது தடவையாகவும் ஜனாதியாக தெரிவுசெய்யப்பட்ட பராக் ஒபாமா,  மற்றும் மிட் ரோம்னி ஆகியோர் தேர்தல் பிரசாரச் செலவுகளாக இத்தொகையை செலவு செய்துள்ளனர்.

இதில் அதிகப்பட்சமாக, ஓஹோயோ மாகாணத்தில் ஒளிபரப்பு முதலிய செலவுகளுக்காக  73 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஃப்ளோரிடா மாகாணத்தில் சுமார் 66.5 கோடியும் விர்ஜினியாவில் சுமார் 55 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளன.

பிரசாரத்தின் முடிவில் ஒபாமா சுமார் 130 கோடி ரூபாவையையும் மிட் ரோம்னி  90 கோடி ரூபாவையும்  செலவிட்டுள்ளனர்.

தமது ஆதரவாளர்கள் செலவிட்ட தொகையுடன் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒபாமா சுமார்  206 கோடி ரூபாவும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மிட் ரோம்னி சுமார் 150 கோடி ரூபாவும் செலவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .