2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

பிலிப்பைன்ஸில் புயல்:உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 16 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸில் வீசிய கடும் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளது.

இந்த புயலில் அகப்பட்டு கடந்த புதன்கிழமை 18 பொதுமக்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், நேற்று வியாழக்கிழமை 36 பேர் உயிரிழந்திருப்பதாக பிலிப்பைன்ஸ் நாட்டு அனர்த்த நிலையம் தெரிவித்தது.

இந்நிலையில், சுமார் 40 பொதுமக்கள் வரையில் காணாமல் போயிருப்பதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 4 சிறுவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, இந்தப் புயல் காரணமாக சுமார் 900 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பிலிப்பைன்ஸில் கடந்த செவ்வாய்க்கிழமை புயல் வீச ஆரம்பித்தது. இந்நிலையில் இந்தப் புயல் இன்று வெள்ளிக்கிழமை காலை வடமேற்கு பிலிப்பைன்ஸுக்கு வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--