2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கடந்தவார படகு விபத்தில் 48 பேர் பலி: ஆஸி பிரதமர்

Super User   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்தவாரம் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்  தீவுக்கருகில் குடியேற்றவாசிகளின் படகு விபத்துக்குள்ளானதில் சுமார் 48 பேர் பலியாகியிருக்கலாம் என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை பாறையொன்றில் மேற்படி மோதியதால் அப்படகு உடைந்து மூழ்கியது. இதில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்பதை அறிவதற்காக உயர்தப்பிய 42 பேரிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்

இந்நிலையில் சுமார் 90 பேர் அப்படகில் பயணித்தனரென கருதப்படுவதாக பிரதமர் கில்லார்ட் தெரிவித்துள்ளார். 'துல்லியமான எண்ணிக்கை எமக்குத் தெரியாமல் போகலாம். ஆனல் 90 பேர் படகில் இருந்தனர் என்பது தற்போதைய நிலையில் சிறந்த கணிப்பாகும் என எனக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பிலிருந்து 2,600 கிலோமீற்றர் தொலைவிலும் இந்தோனேசியாவுக்கு தெற்கே 300 கிலோமீற்றர் தொலைவிலும் கிறிஸ்மஸ் தீவு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் ஈரான், ஈராக் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--