2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

பிரேஸில் வெள்ளத்தால் 500 இற்கும் அதிகமானோர் பலி

Super User   / 2011 ஜனவரி 14 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

பிரேஸிலின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் காரணமாக 500 இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

அந்நாட்டின் தென்கிழக்குப் பிராந்தியத்தில  கடும் மழை காரணமாக பல நகரங்களில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். பெரும் எண்ணிக்கையானோர் விளையாட்டு மைதானங்களிலும் ஏனைய பொது இடங்களிலும் தங்கியுள்ளனர்.

பிரேஸிலில் கடந்த பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை அனர்த்தம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. 1967 ஆம்ஆண்டு சா போலோ நகரில் மண்சரிவுகளால் 430 பேர் பலியாகியிருந்தமைகுறிப்பிடத்தக்கது. தற்போது அதைவிடவும் அதிக எண்ணிக்கையானோர் பலியாகியுள்ளனர்.

உயிர்தப்பியவர்களை  மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைளில் மீட்புப் பணியாளர்கள் இன்று  ஈடுபட்டுள்ளனர்.  பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என பிரேஸில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்று பார்வையிட்ட அந்நாட்டு ஜனாதிபதி டில்மா ரௌசெவ் 7 தொன்  மருந்துப்பொருட்களை அனுப்பி வைக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .