2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

நைஜீரிய துப்பாக்கி பிரயோகத்தில் 79 பேர் பலி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவின் வடக்கு பிரதேசத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில 79 பேர் பலியாகியுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

சம்பூரா மாகாணத்திலுள்ள கலடிமா கிராமத்தில் இரண்டு விசாய தரப்பினரிடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நுழைந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக இந்த தாக்குதலை மேற்கொண்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலானி எனும் பிரிவினை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் மத்திய கடுனா பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 100ற்கும் அதிகமான விவசாயிகள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .