2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

இந்தோனேஷிய வெள்ளப்பெருக்கில் 86 பேர் பலி

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 06 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியிலுள்ள  மேற்கு பபுவா மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக  ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக பொதுமக்கள் 86 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன், இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக 80 பொதுமக்கள் காயமடைந்துள்ள அதேவேளை, ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

அங்கு ஆறு பெருக்கெடுத்ததையடுத்து பலர் காணாமல் போயுள்ளதுடன், மண்சரிவு ஏற்பட்டு மரங்கள் பிடுங்கியெறியப்பட்டன.  

பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைந்த கடற்படையினர் உணவு, மருந்துப் பொருட்கள், கூடாரங்களையும் விநியோகிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையலாம் எனவும் அஞ்சப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .