2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சீனாவில் பூமியதிர்வு; 89 பேர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 23 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் இரண்டு தடவைகள் இடம்பெற்ற பாரிய பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பூமியதிர்ச்சிகளில் குறைந்தபட்சம் 89 பேர் உயிரிழந்துள்ளதுடன், 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் கன்சூ மாகாணத்திலேயே நேற்று திங்கட்கிழமை இரண்டு தடவைகள் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளன.  5.98, 5.6 ரிச்டர் அளவுகளில் இந்த பூமியதிர்ச்சிகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதன்போது ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

2  ஹெலிகொப்டர்களின் உதவியுடன் சுமார் 3,000 படையினரும் பொலிஸாரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--