2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

ஆப்கானிஸ்தான் ஹெலி விபத்தில் 9 படையினர் பலி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் நேட்டோ தலைமையிலான சர்வதேச உதவிப் பாதுகாப்பு படையணியின் உறுப்பினர்கள்   9 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், இந்த ஹெலி விபத்தில் நேட்டோ படை வீரர் ஒருவர், ஆப்கானிஸ்தான் படை வீரர் ஒருவர் மற்றும் அமெரிக்கப் பொதுமகன் ஒருவரும் காயமடைந்துள்ளதாக நேட்டோ தலைமையிலான சர்வதேச உதவிப் பாதுகாப்பு அணி  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் சர்வதேச பாதுகாப்பு படையணியின் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்படையணி தெரிவித்தது.   

இந்த விபத்துச் சம்பவத்திற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. ஆனாலும் இதற்கு எதிரிகளின் தாக்குதல் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை   எனவும்  நேட்டோ தலைமையிலான சர்வதேச உதவிப் பாதுகாப்பு படையணி  கூறியுள்ளது.

இந்த வருடத்தில் மாத்திரம் ஆப்கானிஸ்தானில் சுமார் 529 வெளிநாட்டுப் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--