2021 ஜனவரி 27, புதன்கிழமை

சிரியாவில் கார் குண்டு தாக்குதல்; 9 பேர் பலி

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 04 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 9 பேர் பலியாகியுள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர்.

சிரியாவின் தலைநகரான டமஸ்கஸ்ஸிலுள்ள பெற்றோல் நிலையமொன்றிலேயே இக்கார் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பெருமளவான பொதுமக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தபோதே இக்கார் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
 
நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இக்கார் குண்டுத் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென சிரியாவின் மனித உரிமைகள் ஆர்வலர்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிரியாவில் தலைநகரான டமஸ்கஸ்ஸின் புறநகர்ப் பகுதியிலுள்ள பெற்றோல் நிலையமொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வான் தாக்குதலில் பலர் பலியாகியிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .