2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

93ஆவது பிறந்ததினத்தை கொண்டாடும் நெல்சன் மண்டேலா

Suganthini Ratnam   / 2011 ஜூலை 18 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின்  93ஆவது பிறந்ததினத்தை அந்த நாட்டு மக்கள் இன்று திங்கட்கிழமை கொண்டாடி வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின்  பிறந்ததினம் இன்றாகும்.

67 வருடங்களாக தென்னாபிரிக்காவின் அரசியல் போராட்டத்திற்கான தன்னை அர்ப்பணித்த நெல்சன் மண்டேலாவின் பிறந்ததினத்தன்று 67 நிமிடங்கள் சிரமதானப் பணிகளில் ஈடுபடுமாறு பொதுமக்களை நெல்சன் மண்டேலா பௌண்டேஷன் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

நெல்சன் மண்டேலா தனது சொந்த கிராமத்தில்  குடும்பத்தவருடன் பிறந்ததினத்தை கொண்டாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்சன் மண்டேலாவின்  பிறந்ததின பாடலை பல மில்லியன் கணக்கான பாடசாலை மாணவர்கள் பாடவுள்ளனர். அத்துடன், உலக சாதனைக்காக 12.4 மில்லியன் பேர் ஒரே நேரத்தில் இப்பாடலை பாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--