2025 ஜூலை 09, புதன்கிழமை

இந்தியாவில் பன்றிக்காய்ச்சல்; 94 பேர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் பரவியுள்ள பன்றிக்காய்ச்சல் நோய் காரணமாக கடந்த 5 வாரங்களில் குறைந்தபட்சம் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.

பன்றிக்காய்ச்சலினால் 450க்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாநிலமான இராஜஸ்தானிலேயே  பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இராஜஸ்தானில் 246 பேர் இந்நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். புதுடில்லியில் 3 உயிரிழப்புக்கள் இந்நோயால் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நோய் பரவலுக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. ஆனாலும் குறைந்த குளிர்கால வெப்பநிலையே இதற்கு காரணமென சிலர் தெரிவிக்கின்றனர்.

பன்றிக்காய்ச்சல் நோயால் இந்தியாவில் 2009ஆம் ஆண்டில் 981 பேரும் 2010ஆம் ஆண்டில் 1,763 பேரும் 2011ஆம் ஆண்டில் 75 பேரும் கடந்த வருடம் 405 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நோயால் உலகளாவிய ரீதியில் 200,000 பேர் உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகின்றது.

எச்1என்1 என்ற வைரஸ் காரணமாக இந்நோய் உண்டாகின்றது. 2009ஆம் ஆண்டு மெக்ஸிக்கோவிலேயே முதலில் இந்நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகளிலும் இந்நோய் பரவியது.

இந்நோய் குறித்து பதற்றமடையத் தேவையில்லையெனத் தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதார அமைச்சு, ஆனாலும் பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .