2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

COVID-19: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 631ஆக அதிகரித்தது

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 631ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர்.

இதேவேளை, COVID-19-ஆல் தொற்றுக்குள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையானது 10,149ஐ எட்டியுள்ள நிலையில், இத்தாலியின் COVID-19 மய்யமான லொம்பார்டி பிராந்தியமானது முழுமையற்ற தகவல்களை வழங்கியிருந்ததாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், COVID-19-ஐக் கட்டுப்படுத்துவதற்காக இத்தாலியின் நெருக்கடியான சிறைச்சாலைகளில் அமுல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதவேளை, சீனாவில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது நேற்றைய முடிவில் 3,158ஆக உயர்ந்துள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று தெரிவித்ததுடன், அங்கு நேற்றைய முடிவில் 80,778 பேர் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தென்கொரியாவில் COVID-19-ஆல் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது நேற்றைய முடிவில் 7,755ஆக அதிகரித்துள்ளதுடன், COVID-19-ஆல் நேற்றைய முடிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 60ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, ஈரானில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 291ஆக நேற்றைய முடிவில் காணப்படுவதுடன், COVID-19-ஆல் நேற்றைய முடிவில் 8,042 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .