Editorial / 2018 ஜூன் 21 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரியப் போரில் உயிரிழந்த ஐக்கிய அமெரிக்கப் படையினரின் சடல எச்சங்களை, ஐ.அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை, வடகொரியா மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, அடுத்த சில நாட்களுக்குள், ஒரு தொகுதி எச்சங்கள் கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது.
கொரியப் போர், 1950ஆம் ஆண்டு முதல் 1953ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற போது, நூற்றுக்கணக்கான ஐ.அமெரிக்கப் படையினர் காணாமல் போயிருந்தனர். அவர்களின் சடல எச்சங்களைத் தாம் கொண்டிருப்பதாக, வடகொரியா தெரிவித்து வந்தது.
சிங்கப்பூரில் அண்மையில் இடம்பெற்ற, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையிலான சந்திப்பின் போது, இச்சடல எச்சங்களை வழங்குவதற்கு, வடகொரியா ஒப்புக் கொண்டிருந்தது.
இந்நிலையில், 200 தொகுதிகளாக வழங்கப்படவுள்ள சடல எச்சங்களில் முதற்தொகுதி எச்சங்களை வழங்குவதற்கே, வடகொரியா முடிவுசெய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரியப் போரில், 35,000க்கும் மேற்பட்ட ஐ.அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர். அவர்களுள் 7,700 பேர், காணாமல் போனவர்கள் எனக் கருதப்பட்டனர். அவர்களுள் 5,300 பேர், வடகொரியாவில் காணாமல் போயினர்.
1990ஆம் ஆண்டுக்கும் 2005ஆம் ஆண்டுக்கும் இடையில், 229 தொகுதி எச்சங்கள், ஐ.அமெரிக்காவிடம் வழங்கப்பட்டிருந்தன.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago