2020 ஜூன் 06, சனிக்கிழமை

இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல்

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பகுதியில் பாக்கிஸ்தான் இராணுவத்தினர் நேற்றிரவு(20) முழுவதும் விடியவிடியத் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 15 வருடங்களில் 2018 இல் 2 ஆயிரத்து 936 தடவைகள்  இந்தியா மீது பாக்கிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக இந்தாண்டில் இதுவரையிலானக் காலப்பகுதியில் 2 ஆயிரத்து 50இற்கும் மேற்பட்டத் த​டவைகள் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றிரவு முழுவதும் மோட்டார் ரக குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளைக்கொண்டு பாக்கிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலால் குறித்தப் பகுதியில் உள்ள வீடுகள் சில சேதமடைந்திருப்பதாகவும், சுமார் 15 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்திருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌயிட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X