Editorial / 2020 மே 20 , பி.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா உடனான கைச்சாத்திடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் ஒன்றுமில்லாததும் வலுவற்றதாகியுள்ளதாக தனது நிர்வாகம் கருதுவதாக பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸ் நேற்று அறிவித்ததாக பலஸ்தீன உள்நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பகுதிகளை இணைத்துக் கொள்ளப் போவதாக இஸ்ரேல் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்தே மேற்குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இஸ்ரேலின் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பலஸ்தீனத் தலைநகர் றமல்லாவில் நடைபெற்ற அவசர சந்திப்பொன்றின்போதே மேற்குறித்த அறிவிப்பை ஜனாதிபதி மொஹமட் அப்பாஸ் விடுத்ததாக பலஸ்தீன செய்தி முகவரகம் வஃபா செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க, இஸ்ரேலிய அரசாங்கங்களுடனான அனைத்து ஒப்பந்தங்கள், புரிந்துணர்வுகள், குறித்த புரிந்துணர்வுகள், ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்ட அனைத்து கடமைப்பாடுகளிருந்தும் பலஸ்தீன விடுதலை இயக்கமும், பலஸ்தீன தேசமும் விடுவித்துக் கொள்வதாக ஜனாதிபாதி மொஹமட் அப்பாஸ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தவிர, ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன தேசத்தின் பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பு சக்தியொன்றாக சர்வதேச சமூகத்தின் முன்னால் அனைத்து பொறுப்புகளையும், கடமைப்பாடுகளையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை ஏற்க வேண்டும் என ஜனாதிபதி மொஹமட் அப்பாஸ் மேலும் கூறியுள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரையிலுள்ள குடியிருப்புக்களை இஸ்ரேலுடன் இணைக்கும் சாத்தியத்தை உள்ளடக்கிய தனது மத்திய கிழக்கு திட்டத்தை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாண்டு பெப்ரவரி மாதத்தில் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து ஒப்பந்தங்களிலிருந்து விலகப் போவதாக ஜனாதிபதி மொஹமட் அப்பாஸ் அச்சுறுத்தியிருந்தார்.
59 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago