Editorial / 2020 ஜனவரி 15 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாஷிங்டன்
உக்ரைன் பயணிகள் விமானம் கடந்த புதன்கிழமை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த 176 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொல்லப் பட்டனர்.விமானம் ஏவுகணையால் வீழ்த்தப்பட்டதாக
அமெரிக்க உளவுத்துறை மற்றும் அடிப்படையில் மேற்கத்திய நாடுகளின் கூற்றுக்களை ஈரான் பல நாள்களாக மறுத்தது. எனினும் கடந்த
சனிக்கிழமையன்று ஈரான் தளபதி ஜெனரல் அமிராலி ஹாஜிசாதே, ஏவுகணை இயக்கச் செய்பவர் விமானத்தை ஏவுகணை என்று தவறாகக் கருதி தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டார்.
இந்த தாக்குதல் தொடர்பாக ஈரான் தனது முதல் கைது நடவடிக்கையை முன்னெத்துள்ளதாக அறிவித்தது, சுமார் 30 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் பயணிகள் விமானத்தை இரண்டு ஈரானிய ஏவுகணைகள் தாக்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு ஏவுகணைகள் உக்ரேனிய
விமானத்தைத் தாக்க வானத்தில் பாய்ந்து சென்று காட்சிகளையும் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.குறித்த காட்சி ஈரானிய இராணுவத் தளத்திலிருந்து நான்கு மைல்
தொலைவிலுள்ள பிட்கானே என்ற கிராமத்தில் உள்ள கூரை யிலிருந்த பாதுகாப்பு புகைப்படக் கருவியால் படமாக்கப் பட்டுள்ளன என்றும் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் விமானத்தின் டிரான்ஸ்பாண்டர் ஏன் செயல்படவில்லை என்பதற்கான மர்மத்தையும் விளக்கயுள்ளது.
ஏவுகணைகள் 30 வினாடிகள் இடைவெளியில் சுடப்பட்டன, இது முதல் தாக்குதலில் விமானத்தின் டிரான்ஸ்பாண்டர் முடக்கப்பட்டது,
இதனையடுத்து இரண்டாவது ஏவுகணை விமானத்தை தாக்கியதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஈரான் வேண்டுமென்றே திட்டமிட்டே தாக்குதலில் ஈடுபட்டதாக டைம்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
விமானம் 2020 ஜனவரி 7ஆம் திகதி சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள குறித்த சிசிடிவி காட்சியில் 17 ஒக்டோபர் 2019 என்ற திகதி உள்ளது,
இதன் மூலம் வீடியோவின் உண்மை தன்மை மீது சந்தேகம் எழுந்துள்ளது.
5 minute ago
48 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
48 minute ago
58 minute ago
1 hours ago