Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மூத்த பிரதமரான 94 வயது மஹதிர் முகமத், 34 வயதான உலகின் இளம் பிரதமர் சன்னா மரினுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
பின்லாந்தில் தற்போது 5 கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. இந்தக் கூட்டணிக்கு சோசியல் டெமாக்ரடிக் கட்சி தலைமை வகிக்கிறது.
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக இருந்த ஆண்டி ரின்னி மீது விமர்சனங்கள் எழுந்தன. தொடர் எதிர்ப்பு காரணமாக தன் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்
ஆண்டி ரின்னி. இதனையடுத்து அதே கட்சியைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த, 34 வயதான சன்னா மரின் பின்லாந்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம் சன்னா மரின் உலகின் வயது குறைந்த பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில் உலகின் மூத்த பிரதமரும், மலேசிய பிரதமருமான மஹதிர் முகமத், உலகின் இளம் பிரதமரான சன்னா மரினுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
அவர் கூறும் போது, “இளம் வயதினரின் யோசனைகளை நாங்கள் எப்போது நம்புகிறோம். அதேபோல், அனுபவமுள்ள மூத்த நபர்களிடம் அவர்கள் கலந்தாலோசிக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். இந்த இரண்டு வயதினரும் இணையும் கூட்டணி மிக நன்றாக அமையும்” என்று கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago
7 hours ago