Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏவுகணைள் போலத் தோன்றும் பொருட்கள் வடகொரியாவிலிருந்து ஏவப்பட்டதாக அறிக்கையொன்றில் ஜப்பானிய பாதுகாப்பமைச்சு தெரிவித்ததுடன், தமது பிராந்தியத்துக்குள் அவை விழவில்லை எனக் கூறியுள்ளது. ஜப்பானின் பிராந்தியமானது அதன் தரையிலிருந்து 370 கிலோ மீற்றர் வரை நீழுகின்றமை குறிப்பிடத்தகது.
இந்நிலையில், இன்று வடகொரியாவால் ஏவப்பட்ட இரண்டு எறிபொருட்களும் குறுகியதூர வீச்சையுடையவை என அறிக்கையொன்றில் தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
எறிபொருட்கள் 370 கிலோ மீற்றர் தூரம் பயணித்ததாகக் கணிக்கப்படுவதாகவும், 90 கிலோ மீற்றர் உயரத்தை அடைந்ததாக தென்கொரிய இணைந்த பணியாட்தொகுதியினர் கூறியுள்ளனர்.
தென் பையொங்கன் மாகாணத்திலிருந்து இன்று பிற்பகலே அடையாளந்தெரியாத இரண்டு எறிபொருட்கள் கடலை நோக்கி கிழக்குத் திசையில் ஏவப்பட்டதாக அறிக்கையொன்றில் தென்கொரியாவின் இணைந்த பணியாட் தொகுதியினர் தெரிவித்துள்ளனர்.
அந்தகையில் பிற்பகல் ஏவலானது, வடகொரியா இவ்வாண்டு மேற்கொண்ட சோதனைகளிலிருந்து வேறுபடுகின்றது. அவை வழமையாக அதிகாலையிலேயே வழமையாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு வடக்காக 1,127 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள மிஸாவாவில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க வான் படைத் தளமானது ஏவுகணை எச்சரிப்பொன்றை பிரசுரித்ததுடன், புகலிடத்தை தேடுமாறு கோரியிருந்தததுடன், பின்னர் அனைத்தும் சரியாகி விட்டதாகக் கூறியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
30 minute ago