2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

கொவிட்-19 நோயாளர்களைக் கொன்ற சந்தேகத்தில் வைத்தியர் கைது

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 21 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேற்கு ஜேர்மனிய நகரான எஸெனில், கடும் நோய்வாய்ப்பட்ட இரண்டு கொவிட்-19 நோயாளர்களை நஞ்சூசியொன்று மூலம் கொன்ற சிரேஷ்ட வைத்தியரொருவருக்கெதிராக கொலை விசாரணையொன்றை ஜேர்மனியப் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஒரு கொலையை ஏற்றுக்கொண்ட வைத்தியர், நோயாளர் மற்றும் அவரது உறவுகள் மேலும் பாதிப்படைவதிலிருந்து அவர்களை விடுவிக்க விரும்பிதாக தெரிவித்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், நஞ்சூசியொன்றின் மூலம் கொல்ல முன்னர் நோயாளர்களின் குடும்பங்களுக்கு வைத்தியர் அறிவித்ததாக பில்ட் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .