2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 20 மில்லியனைத் தாண்டியது

Editorial   / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 20 மில்லியனைத் தாண்டியுள்ளதுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 730,000ஐத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், உலகளாவிய ரீதியில் கொவிட்-19-இலிருந்து 12 மில்லியனுக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அமெரிக்காவில் இலங்கை நேரப்படி இன்று காலை 8.45 மணி வரையில் 5,061,178 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 162,604 பேர் கொவிட்-19-ஆல் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது இன்று காலை எட்டு மணி வரையில் 62,064-ஆல் உயர்ந்து 2,215,074ஆகக் காணப்படுவதுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,007-ஆல் உயர்ந்து 44,386ஆகக் காணப்படுகின்றது.

பிரேஸிலானது கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 23,010 கொவிட்-19 தொற்றுக்களையும், 572 கொவிட்-19ஆலான உயிரிழப்புகளையும் பதிவுசெய்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரமைச்சு நேற்றுத் தெரிவித்த நிலையில், அங்கு கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 3,035,422ஆக அதிகரித்துள்ளதுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 101,049ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவானது இன்று புதிதாக 5,118 கொவிட்-19 தொற்றுக்களை பதிவுசெய்த நிலையில் அங்கு கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 892,654ஆக அதிகரித்துள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 70-ஆல் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் அங்கு கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 15,001ஆக அதிகரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--