2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

‘செய்ய வந்ததைச் செய்தோம்’

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 20 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“நாங்கள் என்ன செய்ய வேண்டி வந்தோமோ அதையும், மேலும் அதிகமாகவும் நாங்கள் செய்தோம்” என தனது பிரியாவிடை உரையில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

யூட்டியூப்பில் பிரசுரிக்கப்பட்ட காணொளியொன்றில், தான் கடுமையான சண்டைகளை, கடினமான மோதல்களைச் செய்ததாகத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், ஏனெனில் அதற்காகவே நீங்கள் தன்னைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்கர்களாக தாங்கள் போற்றுகின்ற அனைத்தும் மீதான தாக்குதலொன்று அரசியல் வன்முறை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், இது எப்போதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தனது நிர்வாகமானது உலக வரலாற்றில் மிகச் சிறந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பியதாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

தங்களது நிகழ்ச்சிநிரலானது வலது அல்லது இடதைப் பற்றியதல்ல எனவும், இது குடியரசுக்  கட்சி அல்லது ஜனநாயகக் கட்சி பற்றியதல்ல எனவும் ஆனால் தேசமொன்றின் நலனைப் பற்றியது எனவும் அதாவது முழு தேசத்தைப் பற்றியது என ஜனாதிபதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .