Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 02 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரிய அரசாங்கப் படைகள், சிரிய எதிரணியின் இறுதிப் பிரதான இடமான இட்லிப்பிலுள்ள ஆயுதக் குழுக்கள் இடையேயான இரண்டு நாட்கள் மோதல்களில், இரண்டு தரப்புகளிலும் ஏறத்தாழ 70 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் நேற்று தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மத்தியஸ்தத்துடனான யுத்தநிறுத்த ஒப்பந்தமொன்று இவ்வாண்டு ஓகஸ்ட் மாத இறுதியில் நடைமுறைக்கு வந்த பின்னர் வடமேற்கு சிரிய மாகாணமான இட்லிப்பில் நடைபெற்ற குறித்த மோதல்கள் மிகவும் வன்முறையானவை என பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகத்தின் தலைவர் றமி அப்டெல் ரஹ்மான் கூறியுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட கிராமங்களிலுள்ள மக்கள் மோதலிலிருந்து தப்பிப்பதற்காக வடக்காக நகர்ந்துள்ளனர்.
அரசாங்கப் படைகளிலிருந்து அண்மையில் இஸ்லாமிய ஆயுததாரிகள் மற்றும் அவர்களுடன் இணைந்த எதிரணிப் போராளிகள் கைப்பற்றிய நிலைகள் மீது போர் விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில், மாரெட் அல்-நுமான் பிராந்தியத்தின் மேல் நேற்றுக் காலையில் புகை மண்டலம் மேலெழுந்திருந்தது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் மோதல்கள் ஆரம்பித்தது தொடக்கம் 69 படைவீரர்கள் உயிரிழந்ததாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதில், குறைந்தது 36 பேர் அரசாங்கப் படைகள் ஆவர்.
சில அரசாங்க நிலைகள் மீதான அல்-கொய்தாவின் முன்னாள் சிரியக் கிளையான ஹயாட் தஹ்ரிர் அல்-ஷாமின் தலைமையிலான தாக்குதலொன்றைத் தொடர்ந்தே ஆரம்பத்தில் மோதல் வெடித்ததாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago