Editorial / 2026 மார்ச் 02 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் தொடர்ச்சியான பதில் தாக்குதல்கள் காரணமாக, சவுதி அரேபியாவின் அரசுக்குச் சொந்தமான பிரம்மாண்டமான எண்ணெய் நிறுவனமான அராம்கோ (Aramco), தனது 'ராஸ் தனுரா' (Ras Tanura) சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திங்கட்கிழமை (02) அன்று முன்னெடுக்கப்பட்ட ஈரானிய ஆளில்லா விமான (Drone) தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் வளைகுடா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இந்த நிலையம், மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையம் நாளொன்றுக்கு 550,000 பெரல் மசகு எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இந்த மூடல் நடவடிக்கை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
29 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago